×

உயர் வகுப்பினர் இடஒதுக்கீட்டுக்கான வருமான சான்று வழங்குவதை நிறுத்தியதற்கு எதிரான வழக்கு! : தமிழக அரசு பதில்!

சென்னை:  உயர் வகுப்பினர் இடஒதுக்கீட்டுக்கான வருமான சான்று வழங்குவதை நிறுத்தியதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு குறித்து முடிவெடுக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு பதிலளித்துள்ளது. வழக்கின் பின்னணி, அதாவது, பொருளாதாரரீதியில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய வருமான சான்றிதழ் மற்றும் சொத்து சான்றிதழை வழங்குவதை நிறுத்தி வைக்கும் படி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதாரரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இடஒதுக்கீடு சலுகை பெற அந்தந்த தாசில்தாரர்களிடமிருந்து வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ்களை பெற்று சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சான்றிதழ்களை தற்போது வழங்க வேண்டாமென தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் கடந்த ஜூன் 4ம் தேதி சுற்றறிக்கையை பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், அதற்கு தடைவிதிக்க கோரி தொடங்கப்பட்ட வழக்கில் எந்த காரணமும் குறிப்பிடாமல் சொத்து மற்றும் வருமான சான்றிதழ் வழங்க வேண்டாமென பிறப்பிக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டுமெனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. சான்றிதழ் வழங்குவது ஏன் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக வரும் ஜூன் 30ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், உயர் வகுப்பினர் இடஒதுக்கீட்டுக்கான வருமான சான்று வழங்குவதை நிறுத்தியதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு குறித்து முடிவெடுக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு பதிலளித்துள்ளது. பின்னர்,  தமிழக அரசின் பதிலை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags : Tamilnadu , Search Results Web results 10% reservation for economically weak in general category ...
× RELATED வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு