×

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்களை விட வேண்டாம்: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்!!!

கொல்கத்தா: தமிழ்நாடு உள்ளிட்ட கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 5 மாநிலங்களில் இருந்து மேற்கு வங்கத்திற்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். விமானங்களையும் வாரம் ஒருமுறை அனுமதித்தால் மட்டும் போதும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தொற்று நோயான கொரோனா வைரஸ் நம் நாட்டில் தீவிரமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு உள்ளிட்ட கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 5 மாநிலங்களில் இருந்து மேற்கு வங்கத்திற்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் என்று அம்மாநில முதலமைச்சர்  மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, டெல்லி, குஜராத், உள்ளிட்ட பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் என்று மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே கொல்கத்தாவில் மெட்ரோ ரயில்களும், புறநகர் மின்சார ரயில்களும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை இயங்க தடைவிதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்கத்தா மெட்ரோ ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன் ரயில், சுகாதாரம் மற்றும் உள்துறை ஆகிய மத்திய அமைச்சகங்களின் அனுமதி பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Central ,Mamata Banerjee ,Government ,states ,flights ,Tamil Nadu ,Stop ,center , Stop trains, domestic flights from 5 worst-hit states: Mamata requests to Centre
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...