×

பாதிப்பு அதிகமுள்ள வடசென்னையில் மக்கள் நலனுக்காக கொரோனா தடுப்பு களப்பணியில் இறங்கிய திருநங்கைகள்!!

சென்னை:  கொரோனா பாதிப்பு அதிகமுள்ள வடசென்னை பகுதியில் வைரஸை கட்டுப்படுத்த திருநங்கைகள் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வடசென்னையில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில், திருநங்கைகள் வீடுவீடாக சென்று பொதுமக்களின் உடனிலையை கண்டறியும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.  

மேலும், இதனைத்தொடர்ந்து, கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு விதமான விப்புணர்வுகளையும் அவர்கள் ஏற்படுத்தி வருகினற்னர். தினமும் காலை 7:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை வடசென்னை பகுதியில் உள்ள பழையவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் திருநங்கைகள் கைகழுவும் முறைகள் பற்றியும் முககவசம் அணியும் முறை பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பின்னர், அவர்கள் கொண்டுவந்துள்ள குறிப்பேட்டில் வீட்டில் வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை, வயது, உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அந்த பாதிப்புகளின் தற்போதைய நிலை உள்ளிட்ட தகவல்களை சேகரித்து அதனை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக மாநகராட்சியிடம் ஒப்படைத்து வருகின்றனர். கொரோனா வைரஸ் அதிகளவு பரவி வரும் இந்த காலகட்டத்தில் தங்களின் உயிர்களைக்கூட பெரிதாக கருதாமல் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றும் திருநங்கைகளை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். தானார்களராக திருநங்கைகள், தங்களை ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றும் முதல் பணி இதுவே ஆகும்.

Tags : Corona ,barracks ,North Chennai Transgenders ,North Chennai , Transgender people in Corona detention center for the welfare of vulnerable people in North Chennai
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...