×

துணைமுதல்வர் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜாவுக்கு கொரோனா

தேனி : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா. இவர் தேனி ஆவின் சேர்மனாக உள்ளார். கடந்த 2 தினங்களுக்கு முன் தேனி ஆவின் நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் மார்க்கெட்டிங் மேலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆவின் அலுவலகம் வந்து சென்ற ஓ.ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் ஓ.ராஜா மற்றும் அவரது மனைவி, குடும்பத்தில் 2 பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து ஓ.ராஜா உள்பட நால்வரும் மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : OPS Thambi O. Raja ,Corona ,o raja ,deputy cm ops brother , o raja corona, corona in chennai, corona cases today, o panneer selvam, ops
× RELATED கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி?