×

திருக்கழுக்குன்றம், திருப்போரூர், தாலுகாவில் ஜமாபந்தி துவங்கியது

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் தாலுகாவில் வருவாய் தீர்ப்பய கணக்கு முடிப்பு பணி மற்றும் ஜமாபந்தி நேற்று துவங்கியது. திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ், திருக்கழுக்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய குறு வட்டங்களுக்கான வருவாய் கணக்குகளை  பார்வையிட்டு தணிக்கை செய்தார். இந்த ஜமாபந்தி வரும் ஜூலை 15ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், திருக்கழுக்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட மக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை, மேற்கண்ட தினங்களில் இ- சேவை மையங்கள், அல்லது URL http://gdp. tn.gov.in/Jamabandhi என்ற இணையதளம் மூலமாகவும் பதிவேற்றம் செய்யலாம்.

இதில், திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் தங்கராஜ், மண்டல துணை வட்டாட்சியர் கார்த்திக் ரகுநாத்,   தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சக்திவேல், வட்ட துணை ஆய்வாளர் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர்கள் பெரிய மாரியம்மாள், ஜேம்ஸ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள்  கலந்துக் கொண்டனர். திருப்போரூர்: திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருப்போரூர் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு ஆர்டிஓ செல்வம், பொதுமக்களிடம் ஆன்லைன் மூலம் மனுக்கள் பெறுவதை தொடங்கி வைத்தார். வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ சேவை மையத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில், மண்டல துணை வட்டாட்சியர்கள் சுகுமார், ஜீவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Taluk ,Tirupporeur ,Jamabandi , Jamabandi started,Tirukkurukundram, Tirupporeur, Taluk
× RELATED வல்லம்பட்டி பகுதியில் புதர்மண்டி...