×

பெண் காவலரை தொடர்ந்து மாமியார், குழந்தைகளுக்கு கொரோனா

ஸ்ரீபெரும்புதூர்:  ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய பெண் காவலரை தொடர்ந்து, அவரது மாமியார் மற்றும் குழந்தைகளுக்கு கெரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கடந்த 22ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கொரோனா தொற் இருப்பதாக, கடந்த 24ம் தேதி உறுதியானது. இதையடுத்து அவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெறுகிறார். இதற்கிடையில், அவரது கணவர், மாமியார் மற்றும் குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 60 வயதுடைய மாமியார், 6 வயது மகன், 4 வயது மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைதொடர்ந்து, அவர்கள் 3 பேரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெறுகின்றனர்.

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் கொரோனா பாதிப்பு அடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் 20 பேர் பாதிக்கப்பட்டனர்.கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட 4 பேர் இறந்தனர்.இந்நிலையில் திருப்போரூர், கேளம்பாக்கம், கோவளம், படூர், மேலக்கோட்டையூர், கானத்தூர் ரெட்டிக்குப்பம், சோனலூர் ஆகிய பகுதிகளில் நேற்று தலா ஒருவருக்கு கொரோனா உறுதியானது. திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா உறுதியானதால், அங்கு வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. அலுவலக ஊழியர்கள் குறைந்த அளவே பணிக்கு வந்தனர்.

Tags : mother-in-law ,children ,cop , Coronation, mother-in-law , children,female cop
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...