×

செஞ்சி எம்எல்ஏ மனைவி, மகனுக்கு கொரோனா

செஞ்சி : செஞ்சி எம்எல்ஏ மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி எம்எல்ஏ மஸ்தானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி மற்றும் மகனுக்கு பரிசோதனை செய்ததில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் எம்எல்ஏ சிகிச்சை பெற்று வரும் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Corinna ,Gingee MLA , Gingee, MLA Wife, son, corona positive
× RELATED கணவன் டார்ச்சர் மனைவி புகார்