×

அடிப்படை வசதி இல்லையெனக்கூறி தனிமைமுகாம் மாடியிலிருந்து குதித்து முதியவர் தற்கொலை

திருப்பரங்குன்றம் : உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் போதிய அளவு இல்லை எனக்கூறி, கொரோனா தனிமைப்படுத்துதல் முகாமில் மாடியிலிருந்து குதித்து, முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, பழங்காநத்தம், வடக்கு தெருவை சேர்ந்தவர் தனுஷ்கோடி (60). இவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால், வீட்டிலிருந்த மகனும், மகளும் இவரை ஒதுக்கி வைத்ததாக தெரிகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியில் வந்தவரை, இப்பகுதி  சமூக ஆர்வலர்கள் சுகாதாரத்துறைக்கு தெரிவித்து ஆம்புலன்சில் ஏற்றி மதுரை அரசு மருத்துவமவனைக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா பரிசோதனையில், இவருக்கு தொற்று உறுதியான நிலையில், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் அமைக்கப்பட்ட தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

இம்முகாமில் உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என தெரிகிறது. பரிசோதனை, சிகிச்சைகளும் சரியில்லை என புலம்பியபடியே இருந்த தனுஷ்கோடி, நேற்று முன்தினம் இரவு திடீரென தனிமைப்படுத்தல் முகாமின் முதல் மாடியிலிருந்து, கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் இவருக்கு கால் முறிவு  மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டன. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று அதிகாலை இறந்தார்.


Tags : suicide ,facilities ,terrace ,Thiruparankundram Covid Care Center , Suicide, covid care center,Thiruparankundram , madurai,No basic Facilities
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை