×

ஏரியில் மூழ்கி சிறுவன் பலி: திருவள்ளூர் அருகே சோகம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நண்பர்களுடன் ஏரியில் குளித்த 7 வயது சிறுவன், நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் அடுத்த பட்டறைபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (48). இவரது மகன் திலீப்குமார் (7). இவன் நேற்று மதியம் தனது நண்பர்கள் 10க்கும் மேற்பட்டோருடன் அருகில் உள்ள பூண்டி ஏரிக்கு குளிக்க சென்றான். இதில், நீச்சல் தெரியாத திலீப்குமார் திடீரென தண்ணீரில் மூழ்கினான். இதுகுறித்து அவரது நண்பர்கள், கிராமத்துக்கு வந்து அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேற்றில் சிக்கிய திலீப்குமாரை மீட்டு பட்டறைபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே திலீப்குமார் இறந்து விட்டதாக கூறினர். இதனை கேட்டு பெற்றோர் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : lake ,Tragedy ,Tiruvallur Child ,Tiruvallur , Child drowns,lake,Tragedy ,Tiruvallur
× RELATED களக்காடு அருகே பரபரப்பு புதையல்...