கோர்ட், போலி, குண்டர் சட்டம்

இந்தியாவை பொறுத்தவரை மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் - 30 என்ற மருந்தைப் பயன்படுத்தலாம் என்றும், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சத்தான உணவுகளை உண்ண மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த மருத்துவர் வசந்தகுமார் என்பவர், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மருத்துவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மனுதாரர் கண்டுபிடித்துள்ள பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ் மருந்து, சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் உடல் செல்களில் நுழையவிடாமல் தடுக்கும்.

இந்த மருந்து விலை 2 ரூபாய்’ என்று தெரிவிக்கப்பட்டது. அதனால், மனுவை விரைந்து பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என்று, மத்திய அரசுக்கும், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்படி ஒருபக்கம் இருக்க, கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்திய போலி மருத்துவர் திருத்தணிகாச்சலம் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை மாநகர போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. மற்றொரு பக்கம் கொரோனா வைரசிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அனுமதியின்றி விளம்பரம் செய்த பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, யோகா குரு பாபா ராம்தேவ், தேசிய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பி.எஸ். தோமர், அவரின் மகன் அனுராக்தோமர், மூத்த அறிவியல் விஞ்ஞானி அனுராக் வர்ஷினி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>