×

பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் தமிழகத்தில் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

*அதிகபட்சமாக சென்னையில் 104

சென்னை : தமிழகம் முழுவதும்  703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதுகுறித்து, தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. அதன்படி சென்னையில் அதிகபட்சமாக 104 இடங்கள். சேலம் மாவட்டத்தில் 84, திருவண்ணாமலை மாவட்டத்தில் 72, கடலூர் 64, செங்கல்பட்டு 16, கோவை 7, திண்டுக்கல் 13, ஈரோடு 2, கள்ளக்குறிச்சி 11, காஞ்சிபுரம் 19, கன்னியாகுமரி 1, கிருஷ்ணகிரி 5, மதுரை 57, நாகப்பட்டினம் 46, புதுக்கோட்டை 2, ராமநாதபுரம் 10, ராணிப்பேட்டை 18, சிவகங்கை 6, தென்காசி 2, தஞ்சாவூர் 19, தேனி 4, திருவாரூர் 2, தூத்துக்குடி 4, நெல்லை 5, திருப்பத்தூர் 45, திருப்பூர் 26, திருவள்ளூர் 38, விழுப்புரம் 13, விருதுநகர் 8 ஆகிய 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.

நீலகிரி, நாமக்கல், தர்மபுரி, திருச்சி, வேலூர், பெரம்பலூர், கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் எந்த பகுதியும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார். கடந்த  9ம் தேதி தமிழகத்தில் 201 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மட்டுமே இருந்த  நிலையில் இப்போது 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : districts ,areas ,Tamil Nadu ,Government ,Tn ,Corona , corona Restricted Areas,Restricted Areas,tamilnadu ,Tn Government
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...