×

வந்தே பாரத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட விமானங்களுக்கு ஆஸ்திரேலியாவில் 3 மணிநேரத்தில் அனைத்து டிக்கெட்டும் முன்பதிவு: டிக்கெட் கிடைக்காத இந்தியர்கள் புலம்பல்

புதுடெல்லி: வந்தே பாரத் திட்டத்தின் அறிவிக்கப்பட்ட சிறப்பு விமானங்களுக்கு, ஆஸ்திரேலியாவில் 3 மணிநேரத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன.கொரோனா பரவல் காரணமாக, உலகம் முழுவதும் நாடுகளுக்கு இடையிலான விமான சேவை நிறுத்தப்பட்டுளளன. இதனால் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டவர்களை சிறப்பு விமானங்கள் மூலம் சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் நாட்டுக்கு அழைத்து செல்கின்றன. இதேேபால், இந்தியாவும் பல்வேறு நாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை வந்தே பாரத் என்ற பெயரில் சிறப்பு விமானங்களை இயக்கி, இந்தியர்களை தாய்நாட்டுக்கு அழைத்து வருகிறது. கடந்த மாதம் 6ம் தேதி முதல் இந்த வந்தே பாரத் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது.வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 4 லட்சம் இந்தியர்கள் தாய்நாடு திரும்பி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக 4வது கட்ட திட்டம் வரும் 3ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்த சிறப்பு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 170 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, கென்யா, இலங்கை, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான், சவுதி அரேபியா, வங்காளதேசம், தாய்லாந்து, தென் ஆப்ரிக்கா, ரஷியா, ஆஸ்திரேலியா, மியான்மர், ஜப்பான், உக்ரைன், வியட்நாம் ஆகிய 17 நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இதில் 38 விமானங்கள் பிரிட்டனுக்கும், 32 விமானங்கள் அமெரிக்காவுக்கும் சவுதி அரேபியாவுக்கு 26 விமானங்களும் இயக்கப்பட உள்ளன. சுமார் 2 மாத முடக்கத்துக்குப்பின் இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கியது. எனினும் குறைவான எண்ணிக்கையிலேயே விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதேப்போல அடுத்த மாத மத்தியில் இருந்து சர்வதேச விமானங்களையும் குறைவான எண்ணிக்கையில் இயக்க பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்தநிலையில் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் இருந்தும், மெல்போர்ன் நகரில் இருந்து ஜூலை 14ம் தேதியும் விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 3 மணிநேரத்திலேயே பயணச் சீட்டு முன்பதிவு முடிந்து விட்டது. இதனால் டிக்கெட் கிடைக்காத ஏராளமான இந்தியர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags : Australia ,flights ,Indians , All Tickets ,Reserved , Australia , 3 pm
× RELATED ஆஸ்திரேலியாவில் கனமழை எச்சரிக்கை காரணமாக 100 விமானங்கள் ரத்து