×

அமைச்சர் செங்கோட்டையன் உதவியாளருக்கு கொரோனா

சென்னை: அமைச்சர் செங்கோட்டையன் அலுவலக உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் தனி செயலாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்கு முன் மரணம் அடைந்தார். உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்ேபாது வீடு திரும்பியுள்ளார்.

 இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தின் 2வது மாடியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  தொடர்ந்து தலைமை செயலக ஊழியர்கள் கொரோனா தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருவது அரசு ஊழியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Sengottaiyan ,assistant ,Corona , Corona,Minister Sengottaiyan's, assistant
× RELATED பட்டுக்கோட்டை அருகே உதவி மேலாளருக்கு கொரோனா.: வங்கி தற்காலிகமாக மூடல்