×

பாஜ பிரமுகர் அவதூறு பரப்பிய விவகாரம் திமுக எம்எல்ஏவை கைது செய்யக்கூடாது

* போலீசாருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை : மதுரையில் திமுகவுக்கு எதிராக அவதூறு பரப்பிய பாஜ நிர்வாகியை தாக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ  மூர்த்தியை ஜூலை 2 வரை கைது செய்ய கூடாது என்று  சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.  மதுரையை சேர்ந்த பாஜ நிர்வாகியும் மருத்துவருமான சங்கரபாண்டியன்  என்பவர்  திமுகவுக்கு எதிராக சமூக வலைதளங்களில்  தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். இதையடுத்து  மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மூர்த்தி கடந்த 22ம் தேதி  சங்கரபாண்டியன் வீட்டிற்கு சென்று  தகராறில் ஈடுபட்டதாக அவர் மீது மதுரை ஊமச்சிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தி.மு.க எம்எல்ஏ மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று   நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், ஆஜராகி முன்ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவித்தார். புகார்தாரர் சார்பில், வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


 இதையடுத்து விசாரணையை வரும் ஜூலை 2ம் தேதிக்கு  ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தியை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டார்.Tags : MLA ,BJP ,High Court ,DMK MLA , DMK MLA , Moorthy,Highcourt ,Police
× RELATED மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை.! எம்எல்ஏ கருணாஸ்