×

பரிசோதனை முடிவுகள் வரும் வரை கொரோனா டெஸ்ட் செய்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை : கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை பரிசோதனை மேற்கொண்டர்வர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இனி வருங்காலங்களில் பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் பொதுமக்கள் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவரது வீட்டில் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.  கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் புதிய நடைமுறைப்படி, அவர்கள் வழக்கம் போல் அவரது பணியினை தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும், தனிமனித இடைவெளியை பின்பற்றியும், முகக்கவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை அணிந்தும் மேற்கொள்ளலாம்.

கொரோனா பரிசோதனை முடிவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால் பரிசோதனை மேற்கொண்ட நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கான அனைத்து ஸ்கிரீனிங் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவரின் ஆலோசனையின்படி மருத்துவமனைகளிலோ, கோவிட்-19 பாதுகாப்பு மையங்களிலோ அல்லது அவர்களின் இல்லங்களிலோ தனிமைப்படுத்தப்படுவார்கள்.

Tags : test takers ,Corona , Corona test ,quarantine, results, test, Municipal commissioner orders...
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...