×

புழல் சிறை தலைமை காவலருக்கு தொற்று

புழல்: புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவில் இருந்த 30 கைதிகளுக்கும், தூய்மை பணியாளர் மற்றும் 2 காவலர்களுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புழல் சிறை விசாரணை பிரிவில் 45 வயது மதிக்கத்தக்க தலைமை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, புழல் காவாங்கரை திருநீலகண்ட நகர் மகாவீர் கார்டன் பகுதியில் உள்ள தனது வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதேபோல், கொரோனா பாதிப்பால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புழல், சக்திவேல் நகரை சேர்ந்த 55 வயது நபர் நேற்று பரிதாபமாக இறந்தார். தண்டையார்பேட்டை: ராயபுரம் மண்டலத்திற்க உட்பட்ட பகுதிகளில்187 பேருக்கும், தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 173 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

Tags : Prison Chief ,Corona Postive ,Puzhal Cnetral Prison A Police Man , Corona Postive, Police man,Puzhal Cnetral prison
× RELATED சிறை தலைமை வார்டன் சாவு