×

பாக். விமானிகள் போலி உரிமம் விவகாரம்: சர்வதேச விமான நிறுவனங்கள் விசாரணை

இஸ்லாமாபாத்: கத்தார் ஏர்லைன்ஸ் உட்பட பல சர்வதேச விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் விமானிகளுக்கு எதிராக விசாரணையை தொடங்கியுள்ளன. கடந்த மே 22ம் தேதி கராச்சியில் விமான விபத்து ஏற்பட்டது. இதில் 97 பயணிகள் உயிரிழந்தனர். விமானிகள் மற்றும் விமான கட்டுப்பாடு மையத்துடனான எச்சரிக்கையை அலட்சியம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் விமானிகள் போலி உரிமம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் குலாம் சார்வார் குலாம் சர்வார் கூறுகையில், 262 விமானிகள் மோசடி செய்து பணியில் சேர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.

விசாரணை முழுவதும் முடியும் அவர்களுக்கு பணி வழங்காமல் நிறுத்தி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கடந்த வாரம் 150 விமானிகள் போலி உரிமம் காரணமாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். கத்தார் ஏர்லைன்ஸ் உட்பட பல சர்வதேச விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் ஊழியர்களுக்கு எதிராக விசாரணையை தொடங்கியுள்ளன. மேலும் குவைத் ஏர்லைன்ஸ் நிறுவனம் நேற்று முன்தினம் 7 விமானிகள் மற்றும் 56 பொறியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.  கத்தார் ஏர்வேஸ், ஓமன் ஏர்வேஸ் மற்றும் வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பாகிஸ்தான் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த பட்டியலை தொகுத்துள்ளன.

பாகிஸ்தானின் விமான துறை அதிகாரிகளிடமிருந்து முறையான அறிக்கை வரும் வரை பட்டியலில் உள்ள விமானிகள், ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடக செய்திகள் குறிப்பிட்டுள்ளன. பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கடந்த சனியன்று கூறுகையில், “வெளிநாட்டு பணிகள் மற்றும் சர்வதேச ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பிஏஐ கடிதம் எழுதியுள்ளது. இதில் 141 விமானிகள் நம்பகமான முறையில் உரிமம் பெறாதவரகள் என சந்தேகிக்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.



Tags : Pak ,Pilots ,airlines ,aviation minister ,Pakistan , Pilots,fake licenses,aviation minister
× RELATED ஆப்கானில் பாக். குண்டு மழை 8 பேர் பலி