×

பாகிஸ்தானில் பங்குச்சந்தை அலுவலகத்தின் மீது தாக்குதல்: 10 பேர் பரிதாப சாவு

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகர பங்குச்சந்தை அலுவலகத்தின் மீது தீவிரவாதிகள் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் பங்குச்சந்தை அலுவலகம் உள்ளது. இங்கு தினசரி பங்குகள் விற்பனை நடப்பது வழக்கம். இந்த அலுவலகத்தில் நேற்று காலை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் உதவி காவல் ஆய்வாளர் உட்பட 10  பேர் உயிரிழந்தனர். கண்மூடி கண் திறப்பதற்குள் இந்த தாக்குதல் நடந்துவிட்டது என்றும், பயங்கர ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகள் கையெறி குண்டை வீசி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தி உளளனர். பின்னர் தங்களிடம் இருந்த துப்பாக்கியாலும் சரமாரியாக சுட்டுள்ளனர்.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் விரைந்து வந்து தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் சுட்டதில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 5 பாதுகாப்பு காவலர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், கையெறி குண்டுகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் காயமடைந்த ஏராளமானவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதிக்கு கூடுதல் படையினர் வரவழைக்கப்படடு, தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் அந்தப்பகுதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட 4 தீவிரவாதிகளும் இந்த அமைப்பைச் சேர்ந்த தற்கொலை படை தீவிரவாதிகள் எனவும் தெரியவந்துள்ளது.Tags : Pakistan ,attack ,raid ,Karachi , Pakisthan,Deadly raid,Karachi
× RELATED தொடர்ந்து 6-வது நாளாக எல்லையில்...