×

அமெரிக்கா, ஐரோப்பாவில் கொரோனா உச்சம்: இந்தியாவின் தோல் ஏற்றுமதி தொழில் 10% சரிவு

சென்னை: வெளிநாடுகளுக்கு தோல் ஏற்றுமதி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தநிலைதில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு, ஆங்காங்கே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் முன்பதிவு செய்யப்பட்டிருந்த தோல் ஏற்றுமதியை வெளிநாடுகள் ரத்து செய்துள்ளதால், இந்தியாவில் தோல் ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தோல் ஏற்றுமதி கவுன்சில் தலைவர் சகில் அகமத் பனருனா கூறியதாவது: அமெரிக்கா, ஐரோப்பாவை மையமாக கொண்டு இந்தியாவின் 70 சதவீதம் தோல் ஏற்றுமதி வர்த்தகம் நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது கொரோனாவால் தோல் ஏற்றுமதி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-19ல் 5.69 பில்லியன் டாலராகவும், 2019-20ல் 5.7 பில்லியன் டாலராகவும் இருந்த ஏற்றுமதி. இந்த நடப்பாண்டில் ஏற்றுமதி 10.89 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் தோல் ஏற்றுமதி கடந்த மார்ச் மாதம் 10 சதவீதம் பாதிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் - மே மதங்களை சேர்த்து 17 சதவீதம் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் - மே 757.11 மில்லியன் டாலராக இருந்த தோல் ஏற்றுமதி, இந்த வருடம் ஏப்ரல்-மே மாதத்தில் 128.52 மில்லியன் டாலராக குறைந்துள்ளது.

முக்கியமாக பல வெளிநாட்டு முன்னனி தோல் நிறுவனங்கள், முன்பதிவு செய்து வைத்திருந்த தோல் வர்த்தகத்தை ரத்து செய்துள்ளனர். தற்போது ரத்து செய்துள்ளதால், ஏற்றுமதி நிறுவனங்கள் பல்வேறு கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். ஏற்றுமதி செய்யப்பட்ட பின்னர் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம். ஆனால் ரத்து செய்யப்பட்ட பொருட்களுக்கு இன்சூரன்ஸ் இல்லை. இதுபோன்ற நோய் தொற்று பரவல் காலத்தில், இயற்கை பேரிடர் காலத்தில் இன்சூரன்ஸ் வழங்க இசிஜிசி பரிந்துரை செய்ய வேண்டும். கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் தோல், தோல் பொருள், காலணிகள் ஏற்றுமதி 442 மில்லியன் டாலராக இருந்தது.

ஆனால் ஊரடங்கால் இந்த ஆண்டு ஜூன் மாதம் 155 மில்லியன் டாலராக அதாவது 35 சதவீதமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் ஜூலை மாதம் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தினால் 50 சதவீதமாக மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஊரடங்கு தொடர்ந்தால், தொடர்ந்து சரிவு ஏற்படும். செப்டம்பரில் இயல்பு நிலை திரும்பும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பாவுடன் புதிய ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளன. இதனால் தோல் ஏற்றுமதி 2020- 2021 ஆண்டில் 5 பில்லியன் டாலராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

Tags : Corona ,US ,India ,Europe ,Corona India , Corona, corona Virus,leather export
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...