×

ரத்து செய்யப்பட்ட முன்பதிவு கட்டணத்தை ரயில் நிலைய கவுண்டர்களில் மட்டும் சுமார் ரூ44.5 கோடி கொடுத்துள்ளது: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: தெற்கு ரயில்வே ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட்களுக்கான முன்பதிவு கட்டணத்தை ரயில் நிலைய கவுண்டர்களில் மட்டும் சுமார் ரூ44.5 கோடி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தொகை 22-ம் தேதி மே மாதம் முதல் 28-ம் தேதி ஜூன் தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பொதுமுடக்கம் காரணமாக, நாடு முழுவதும் மார்ச் 22-ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மேலும் மே 12 -ம் தேதி முதல் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பயணிகள் ரயில்கள் ஜூன் 30-ம் தேதி வரை இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து மார்ச் 22-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், ரயில்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், பொதுமுடக்கம் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் பயணம் மேற்கொள்ள முடியாதவர்களுக்கு டிக்கெட் முன்பதிவு கட்டணம் திரும்ப தரப்படும் என்று ரயில்வே அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட 19 ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான பயணக் கட்டணத்தை பயணிகள் முழுமையாக பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

19 ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கவுண்டர்களில் பயணக் கட்டணம் திரும்ப தரப்படும் என்றும், முன்பதிவு மையங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாக தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் முன்பதிவு கட்டணத்தை ரயில் நிலைய கவுண்டர்களில் மட்டும் சுமார் ரூ44.5 கோடி கொடுத்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற்றுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : railway station ,Southern Railway , 44.5 crores , canceled ,booking , Southern Railway
× RELATED ஆவடி ரயில் நிலையத்தில் ரூ.1.5 கோடி...