வேலை இல்லாததால் சகதியில் இறங்கி மீன்களை பிடித்து காலம் தள்ளும் தொழிலாளர்கள்

மேலூர்: ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள மேலூர் பகுதி தொழிலாளர்கள் நீர்நிலைகளில் சகதியில் இறங்கி எஞ்சிய மீன்களை பிடித்து வாழ்க்கையை நகர்த்தும் நிலைக்கு சென்றுவிட்டனர். மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான பலர் கட்டிடம் கட்டும் பணி உட்பட பல்வேறு கூலி வேலை பார்த்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இவர்கள் வேலை ஏதுமின்றி தவித்து வருகின்றனர். தங்கள் குடும்ப வறுமையை போக்கும் வகையில் வேறு வேலை ஏதும் இல்லாமல் உள்ள இவர்கள், கிராமங்களில் உள்ள கண்மாயை நோக்கி திரும்பி உள்ளனர்.

கண்மாய்களில் குத்தகைதாரர்கள் மீன்களை பிடித்து சென்றது போக, எஞ்சிய மீன்களை தேடி சகதியில் இறங்கி மீன்களை தேடுகின்றனர். ஒரு நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சகதியில் இருந்து கிடைக்கும் அந்த சொற்ப மீன்களை விற்று கிடைக்கும் பணத்தில் தன்னுடைய வாழ்க்கையை நகர்த்தி வருவதாக முத்திருளாண்டியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வடமுகம் என்பவர் தெரிவித்தார்.

Related Stories:

>