×

அர்ப்பணிப்பு உணர்வோடு ஓய்வில்லாமல் உழைத்து வரும் காவலர்கள் வழங்கிய நிதியை திருப்பி வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை: கொரனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிக்காக தமிழக காவல்துறை சார்பில் வழங்கிய ஒரு நாள் ஊதியத்தை அவர்களுக்கே திருப்பி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரனா தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர். இந்த நிலையில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஓய்வில்லாமல் உழைத்து வரும் காவலர்களுக்கு அவர்கள் வழங்கிய நிதியை திருப்பி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி காவலர்களிடம் இருந்து பெறப்பட்ட ஒரு நாள் ஊதியமான 8 கோடியே 41 லட்ச ரூபாய் மீண்டும் அவர்களுக்கே வழங்கப்படுகிறது.

Tags : Chief Minister ,guards , Dedication, Guards, Finance, CM
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்