×

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 9 ஆம் தேதி தமிழகத்தில் 201 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மட்டுமே இருந்த நிலையில் இன்றைய நிலவரப்படி 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 104 பகுதிகளும், சேலத்தில் 84, திருவண்ணாமலையில் 72, கடலூரில் 64 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. நீலகிரி, நாமக்கல், தருமபுரி, திருச்சி, வேலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை எனவும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : areas ,districts ,Tamil Nadu ,Government of Tamil Nadu , Tamil Nadu, Restricted Areas, Government of Tamil Nadu
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு