×

நாகையில் பால் விற்பனையாளர்களை மிரட்டியதாக காவலர் சஸ்பெண்ட்.: மாவட்ட எஸ்.பி. உத்தரவு

நாகை: நாகையில் பால் விற்பனையாளர்களை மிரட்டியதாக காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பால் விற்பனையாளர்களை மிரட்டி ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட காவலர் ரமணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளத்தில் 2 வியாபாரிகள் உயிரிழந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவலர்களின் செயலுக்கு பல தரப்பினரும் தங்களது கண்டனங்களை சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த சமபத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பால் விற்பனையாளர்கள் காவலர்களின் வீடுகளுக்கு பால் கொடுக்க மாட்டோம் எடுக்க அறிவித்து இருந்தனர். அதனைத் தொடர்ந்து சாத்தான்குளம் சம்பத்தை சுட்டிக்காட்டி நாகை டிஎஸ்பி வாகனத்தின் ஓட்டுநராகப் பணிபுரியும் காவலர் ரமணன் முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்தார். பால் விற்பனையாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களது வாகனத்தை மறிப்போம், மாஸ்க் இல்லை, வித் அவுட் ஹெல்மட், வித் அவுட் சீட் பெல்ட் போன்ற வழக்குகளைப் பதிவு செய்வோம் என்று  பால் விற்பனையாளர்களுக்கு முகநூல் மூலம் மிரட்டல் விடுத்து இருந்தார்.

 காவலர் ரமணன் முகநூலில் பதிவு செய்த மிரட்டல் விடும் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனையடுத்து  நாகை எஸ்.பி.நாகரத்தினம் விளக்கம் கேட்டு காவலர் ரமணனுக்கு மெமோ கொடுத்து இருந்தார்.  காவலர் ரமணனிடம் விளக்கம் கேட்டு மெமோ கொடுத்து இருந்த நிலையில் தற்போது அவரை நாகை மாவட்ட எஸ்.பி.நாகரத்தினம்  பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


Tags : milk dealers ,Naga , Police ,suspended ,threatening, milk,Naga,SP Directive
× RELATED நாகையில் போக்குவரத்து மாற்றம்