×

கொரோனா தொற்று உயிரிழப்புக்கு இத்தாலியில் அஞ்சலி: அந்நாட்டு அதிபர் முன்னிலையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி

பெர்கமோ: கொரோனா கொள்ளை நோய் பாதித்து இத்தாலியில் உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டது. சீனாவுக்கு அடுத்ததாக கொரோனா தொற்று வேகமாக பரவிய இத்தாலியில் தற்போது பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் முன்னேறிய நாடான இத்தாலியில் 34,700 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பெர்கமோ என்ற இடத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா, முன்னிலையில் நினைவிடத்தில் பூங்கொத்து வைத்து துக்கம் அனுசரிக்கப்பட்டது. பெர்கமோ நகர மேயர் மற்றும் முக்கிய பிரமுர்கள் முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொற்று பாதித்து உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மொத்தம் 215 நாடுகளிலும் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது வரை ஒரு கோடியே 2 லட்சத்து 49 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையும் 5 லட்சத்து 4 ஆயிரத்து 400 ஆக அதிகரித்துள்ளது. 5,353,107 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 57,670 பேர் கவலைக்கிடமான  நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி  கண்டறியப்பட்டு தற்போது 215 நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Italy , Corona, casualty, Italy, tribute, President
× RELATED ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்