×

சீர்காழி அருகே சவுடுமண் குவாரியை மூடக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிய கிராம மக்கள்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நெப்பத்தூரில் அரசு அனுமதி பெற்ற தனியார் சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் சிதம்பரத்தை சேர்ந்த கிருஷ்ணன் சவுடுமண் எடுத்து விற்பனை செய்து வருகிறார். இக்குவாரியில் மண் எடுப்பதால் சுற்றியுள்ள வீடுகளுக்குள் புழுதி மண் புகுவதாகவும் நிலத்தடி நீர், விவசாய பணி பாதிக்கப்படுவதாகவும், உப்பு நீராக மாறுவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த பகுதியில் நேற்று 20 க்கும் மேற்பட்ட வீடுகளில் மண் குவாரியை தடை செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டு உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : houses ,Soudhamann Quarry ,Sirkazhi , Sirkazhi, Soundman Quarry, Black Flag, Villagers
× RELATED செங்கல்பட்டு மதுராந்தகத்தில் கொரோனா...