×

ரபேல் போர் விமானங்கள் பிரான்சிலிருந்து முதற்கட்டமாக ஜூலை 27-ம் தேதி இந்தியா வந்தடையும் என தகவல்

டெல்லி: ரபேல் போர் விமானங்கள் முதற்கட்டமாக ஜூலை 27-ம் தேதி இந்தியா வந்தடையும் என தகவல் வெளியாகி உள்ளது. முதலில் 4 அல்லது 6 ரபேல் விமானங்களை பிரான்சின் இஸ்ட்ரெஸ்-ல்  இருந்து இந்திய விமானிகள் அரியானாவுக்கு கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய விமானப்படையை பலப்படுத்துவற்காக, ரூ.59 ஆயிரம் கோடி செலவில் அதிநவீனமான 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் போர் விமானம் அதிநவீன வசதிகளைக் கொண்டது.  இந்த விமானம் இரட்டை என்ஜின் கொண்ட ஜெட் போர் விமானம் ஆகும். விமானம் தாங்கி போர் கப்பலில் இருந்தும், கரையோர தளத்தில் இருந்தும் இயங்கும் ஆற்றல் வாய்ந்தது. இது முழுமையான பல்துறை விமானம் ஆகும். அதி நவீன ரேடார் வசதிகளை கொண்ட இந்த விமானத்தை அவ்வளவு எளிதாக சுட்டு வீழ்த்திவிட முடியாது என்பது மிக முக்கியமான சிறப்பாகும். கடும் குளிர் நிலவும் காஷ்மீரின் லே போன்ற மலை உச்சிகளில் அமைந்து உள்ள விமான தளங்களில் இருந்துகூட இந்த விமானத்தை இயக்க முடியும். மேலும்
இந்த விமானத்தை வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம்.

ஏற்கனவே இந்த விமானங்களில் பொருத்தப்படக்கூடிய மெட்டோர் , ஸ்கால்ப் ஏவுகணைகள் ஆகியன இந்தியா வந்துள்ள நிலையில், ரபேல் விமானங்களும் வந்தவுடன், Golden Arrows என்ற தனி ஸ்குவாட்ரன் வரும் ஆகஸ்ட் மாதம் படையில் இணையும் தயார் நிலைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  36 ரபேல் விமானங்களின் இந்த ஆண்டு 4 அல்லது 6 விமானங்கள் இந்தியாவிடம் ஓப்படைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எஞ்சி உள்ள விமானங்கள் 2022 க்குள் இந்தியாவிடம் அந்த நிறுவனம் ஒப்படைத்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Tags : Rafael ,India , reported ,Rafael ,fighter, jets,India ,July 27
× RELATED ரஃபேல் விமானம் முதல் தேர்தல்...