×

விளைச்சல் அதிகரிப்பால் வெண்டைக்காய் விலை சரிவு: சாலையோரம் கொட்டும் அவலம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம், இருமத்தூர், மாட்லாம்பட்டி, அரியகுளம், கம்பைநல்லூர், பாலக்கோடு, காரிமங்கலம், இண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில், விவசாயிகள் வெண்டைக்காய் பயிரிடுகின்றனர். விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் வெண்டைக்காய், தர்மபுரி மார்க்கெட் மற்றும் கேரளாவிற்கும், பெங்களூருக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. நடப்பாண்டில் வெண்டைக்காய் நல்ல விளைச்சல் தந்துள்ளது.
கடந்த சில நாட்களாக அதிகபட்சமாக சில்லரை விலையில் கூட, கிலோ ரூ8 முதல் ரூ10 வரை விற்பனை செய்யப்படுகிறது.

விளைச்சல் அதிகரிப்பால் கொள் முதல் விலை மிகவும் குறைந்து கிலோ ரூ5 வரை மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கிறது. இதனால் கூலிக்கூட கட்டுபடியாகாத நிலையில், வெண்டைக்காய்களை நேற்று தர்மபுரி திருப்பத்தூர் சாலையில் விவசாயிகள் சாலையோரம் கொட்டி சென்றனர். அவற்றை அந்த பகுதியில் உள்ள ஆடுகள் மற்றும் மாடுகள் தின்றன.



Tags : Pumpkin, price drop
× RELATED தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று...