×

சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைப்பதற்கு கமல் எதிர்ப்பு.:புனலாய்வுத் துறையிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

சென்னை: சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைப்பதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறியதாக போலீசார் கைது செய்து தாக்கியதுடன், கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அங்கு இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். எனவே, போலீசாரை கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  

இதனையடுத்து மதுரை உயர் நீதிமன்ற கிளை தாமாகவே முன்வந்து இவ்வழக்கை விசாரித்தது. ஐகோர்ட் உத்தரவின் பேரில் மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ்  அதிகாரிகளை விடுவிக்க முயற்சி நடப்பதாக புகார் எழுந்தது. மேலும் அதிகாரிகள் தரப்பில், தந்தை, மகனுக்கு உடல் நலக்குறைவு, மூச்சு திணறலால் உயிரிழந்ததாக மாற்று கருத்துகள் வந்ததாலும்  மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து வணிகர்கள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி விசாரிக்க வலியுறுத்தினர்.

இதனால் இந்த வழக்கை சிபிசிஐடி மாற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருந்தது. முன்னதாக சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் வழக்குகள் கிடப்பில் உள்ளன என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகள் மேல் ஐ.பி.சி. 302 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து புனலாய்வுத் துறையிடம் ஒப்படைக்கக் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Kamal ,CBI , Kamal ,opposes, sathankulam , CBI
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...