×

இந்தியா ஜப்பான் கடற்படையுடன் இணைந்து போர் ஒத்திகை

கன்னியாகுமரி: லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்தியா ஜப்பான் நாட்டுடன் இணைந்து இந்தியப் பெருங்கடல் பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட்டது.

இந்தியப் பெருங்கடலில் இந்தியா கடற்படையை சேர்ந்த ஐ.என்.எஸ் ராணா மற்றும் ஐ.என்.எஸ் குலிஷ் ஆகிய போர்க் கப்பல்கள் ஜப்பான் கடற்படையின் ஜே.எஸ் காஷ்மீர் மற்றும் ஜே.எஸ் ஷிமாயுகி கப்பல்களுடன் போர் ஒத்திகையில் ஈடுபட்டன.

சில தினங்களுக்கு முன்பு ஜப்பான் கடற்படை போர்க்கப்பல்கள் அமெரிக்கக் கடற்படையுடன் போர் ஒத்திகையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. சீன ராணுவம் ஜப்பானிய கடற்படையுடன் அவ்வப்போது பிரச்னையில் ஈடுபட்டு வருகிறது. சீனா உரிமை கோரும் சில தீவுகளில் ஜப்பானின் உரிமையை நிலைநாட்டும் வகையில் அந்நாட்டு அரசு சில நிர்வாக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அதன் விளைவாகவே தனது வல்லமையை நிரூபித்து சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படையுடன் சேர்ந்து கூட்டு ராணுவ போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது.



Tags : India ,war ,Japan Navy India ,Navy ,Japan , India, Japan, Navy
× RELATED “நீதியின் பக்கம் நின்று, I.N.D.I.A....