×

திருப்பரங்குன்றம் அருகே மக்கள் பீதி தனிமைப்படுத்தும் மையத்தால் கொரோனா பரவும் அபாயம்

திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் கொரோனா தனிமைப்படுத்துதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் தற்போது சுமார் 200க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த தனிமைப்படுத்துதல் மையம் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் சுமார் 12 குடியிருப்பு பகுதிகளை கொண்ட ஐய்யப்பன் தாங்கல் பகுதி அமைந்துள்ளது. கொரோனா தனிமைபடுத்துதல் மையத்திற்க்குள் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் வந்து செல்வதோடு தனிமைப்படுத்துதல் மையத்தில் உள்ளவர்களும் வெளியே நடமாடி வருகின்றனர்.

அத்துடன் தனிமைப்படுத்துதல் மையத்தில் இருந்து மாஸ்க் உள்ளிட்ட குப்பைகள் குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாகவும் இதனால் தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்து இப்பகுதி பொதுமக்களை அச்சத்தில் இருந்த காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐயப்பன் தாங்கல் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : isolation center ,Thiruparankundram , Thiruparankundram, people, corona
× RELATED திருப்பரங்குன்றம் அருகே 16ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு