×

புதுச்சேரியில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..: பரிசோதனை முடிவில் முதல்வர் நாராயணசாமிக்கு தொற்று இல்லை என தகவல்!

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் தீவிரமடைந்துவரும் கொரோனா தொற்று மக்களை பீதியடைய வைத்திருக்கிறது. முதல் மற்றும் இரண்டாம் ஊரடங்கு உத்தரவின்போது இரட்டை இலக்கத்தில் இருந்த தொற்றின் எண்ணிக்கை தற்போது 690 ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் இன்று மட்டும் 42 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை  262 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில் மீதமுள்ள 417 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைப் பலனளிக்காமல் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. முன்னதாக, முதலமைச்சர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சட்டப்பேரவை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, 2 நாட்களுக்கு முதல்வர் அலுவலகம் மூடப்பட்டது. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தனிமைப்படுத்திக்கொள்ள முதல்வர் நாராயணசாமியை சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி உட்பட அவரது வீடு, அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், காவலர்கள் என 74 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதலமைச்சர் உட்பட அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.


Tags : Puducherry. , Puducherry, Corona, Chief Minister Narayanasamy
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...