×

கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் விவரம்..! வெளியிட்டது சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் மண்டலம் வாரியாக கொரேனா பாதிப்பில் சிகிச்சை பெறுபவர்கள் விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அண்ணா நகர் மண்டலத்தை சேர்ந்த 2,739 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தேனாம்பேட்டையில்  2,296 பேரும்,  ராயபுரத்தில் 2,153 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சென்னை மாநகராட்சி முதல் முறையாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 2,137 பேரும்,  தண்டையார்பேட்டையில் 1,990 பேரும்,  திரு.வி.க.நகரில் 1,561 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். அடையாறில் 1,377 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Corona Therapists ,Madras Corporation , Corona,Madras Corporation
× RELATED கோயில் சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவேற்ற அதிகாரிகளுக்கு பயிற்சி