×

தந்தை, மகன் மரண வழக்கில் சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது: ப.சிதம்பரம் கருத்து

சென்னை: தந்தை, மகன் மரண வழக்கில் சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது என ப.சிதம்பரம் கருது தெரிவித்துள்ளார். ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸை கடந்த 19ம் தேதி இரவில் போலீசார் காவல் நிலையத்துக்கு விசாரணை கைதிகாளாக அழைத்து சென்றனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில்  அவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் கடந்த 22ம் தேதி இரவில் அடுத்தடுத்து மர்மமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தந்தை, மகன் மரண வழக்கில் சிபிஐ விசாரணையை விட சிறப்பு புலனாய்வு குழு விசாரணையே உகந்தது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தூத்துக்குடியில் காவல் துறையினர் கைது செய்து காவலில் இருக்கும்போது மரணம் அடைந்த இரண்டு வர்த்தகர்களுக்கு (தந்தை, மகன்) நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை  இப்பொழுது பிறந்திருக்கிறது.

1996ம் ஆண்டில் டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளை மத்திய, மாநில் காவல்துறைகள் பின்பற்றுவதில்லை என்பதே உண்மை. சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து. இருந்தாலும் சிபிஐ விசாரணையை வரவேற்கிறேன், என கூறியுள்ளார். முன்னதாக இச்சம்பவம் குறித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணைக்கு வரும்போது, இதனை தெரிவித்து, அனுமதி பெற்று சிபிஐயிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்படும், என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : investigation ,Special Investigation Team ,P. Chidambaram ,CBI ,Special Investigation Panel , Sathankulam Case, CBI Investigation, P Chidambaram, Special Investigation Team
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...