×

சாத்தான்குளம் விவகாரம் அரசியல் கட்சிகளின் அழுத்தத்தால் சிபிஐக்கு மாற்றம்: மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவு

சென்னை: சிறையில் தந்தை, மகன் இறந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் கடும் அழுத்தத்தால் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்தினரின் கடும் அழுத்தத்தால் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வழக்கை முதலமைச்சர் சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளார். நீதி வழங்கும் அரசியல் துணிவும், முதுகெலும்பும் அரசுக்கு இருந்திருப்பின் உயிர்பறித்த காவல்துறையினர்  இப்போதும் சுதந்திரமாக உலவ முடியுமா? இரு அப்பாவிகளின் உயிர் பறிக்கப்பட்டிருப்பதற்கும் அவர்களது குடும்பத்திற்கும் நீதி வழங்க வேண்டும் எனில், அவர்களின் கோரிக்கையை ஏற்று ஐபிசி 302ன்கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து- சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசாரை உடனே கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Sattankulam ,CBI ,parties ,MK Stalin , Chathankulam affair, political party, change to CBI, MK Stalin, Twitter post
× RELATED வேறு பெண்ணுடன் இருந்த கள்ளக்காதலை...