×

டாஸ்மாக் கடைகளுக்கு செல்ல வசதியாக ஊரக வளர்ச்சித்துறை சாலைகளை நெடுஞ்சாலைத்துறை புதுப்பிக்கிறது

* மாவட்ட இதர சாலைகளாக தரம் உயருகிறது
* டெண்டர் விடும் பணிகளில் தீவிரம்

சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு செல்ல வசதியாக ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுபாட்டில் உள்ள சாலைகளை புதுப்பிக்கும் வகையில், அந்த சாலைகள் நெடுஞ்சாலைத்துறை மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்தப்படுகிறது. இந்த சாலைகளை அகலப்படுத்தவும், புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளும் வகையில் டெண்டர் விடும் பணிகளில் நெடுஞ்சாலைத்துறை தீவிரம் காட்டி வருகிறது. பெருநகரங்களுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தவும், கிராம மக்கள் அனைத்து பகுதிகளுக்கு எளிதில் சென்று வர போக்குவரத்து வசதி செய்து தரும் வகையில், ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் உள்ள கிராம சாலைகள், மாவட்ட ஊராட்சி சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள் நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்படுகிறது.

அதன்படி தற்போது வரை 7964 கி.மீ நீளமுள்ள 2596 ஊராட்சி ஒன்றிய சாலைகள், ஊராட்சி சாலைகள் மாவட்ட இதர சாலைகளை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட சாலைகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைகளை புதுப்பிப்பது, அகலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறுபணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், நடப்பாண்டில் ரூ.1050 கோடியில் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு, மேம்படுத்தப்படுகிறது. இதற்காக, சாலைகளை தேர்வு செய்து அந்த சாலைகளை நெடுஞ்சாலைத்துறை சாலைகளாக தரம் உயர்த்தப்படுகிறது. இதற்காக, மாநிலம் முழுவதும் சாலைகளை தேர்வு செய்து, அதற்கு அறிக்கை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலங்கள் முழுவதும் ஊரக பகுதிகளிலும், மாவட்ட இதர சாலை அமைந்துள்ள பகுதிகளிலும் டாஸ்மாக் கடை மாற்றப்பட்டுள்ளது. இதனால், டாஸ்மாக் கடைகளுக்கு செல்ல சாலை வசதிகள் சரியாக இல்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளுக்கு செல் வசதியாக ஊரக வளர்ச்சித்துறை கட்டுபாட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை புதுப்பிக்க முடிவு செய்துள்ளது. அதன்பேரில், தற்போது, டாஸ்மாக் கடைகள் உள்ள ஊரக பகுதிகளில் உள்ள சாலைகள் நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்படுகிறது.

அந்த சாலைகளில் மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்துகிறது. இதற்காக, அந்த சாலைகள் தேர்வு செய்து, அதை புதுப்பிக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த சாலைகளை அகலப்படுத்தவும், புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளவும் டெண்டர் விடும் பணிகளில் நெடுஞ்சாலைத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை ஊழியர் ஒருவர் கூறும் போது, ‘தற்போது ஊரக பகுதிகளில் உள்ள சாலைகளில் பெரும்பாலானவைகளில் பஸ் கூட வருவதில்லை. அந்த சாலைகளில் 3.45 மீட்டர் தான் அமைக்கப்படுகிறது.

ஆனால், அந்த சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருந்தால், அந்த சாலைகளை கையகப்படுத்தி, 5 மீட்டராக அகலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த சாலைகள் புதுப்பித்து 2 ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை. அந்த சாலைகளை மீண்டும் புதுப்பித்து அகலப்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த சாலைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளது’ என்றார். ஊரக சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருந்தால், அந்த சாலைகளை கையகப்படுத்தி, 5 மீட்டராக அகலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : roads ,task force , Task Shop, Facilities, Rural Development, Road, Highway, Renewal
× RELATED நாடாளுமன்றத் தொகுதி வாரியாக அதிமுக...