×

விண்வெளித்துறையில் தனியார் பங்கேற்றாலும் இஸ்ரோ திட்ட பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது: சிவன் பேட்டி

சென்னை: வீடியோ கான்பரன்சிங் மூலமாக இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: விண்வெளி துறையில் தனியார் பங்கேற்றாலும் அது எந்த விதத்திலும் இஸ்ரோவின் திட்டப்பணிகளுக்கும், தேசிய பாதுகாப்பு மற்றும் தேச நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஊரடங்கு காரணமாக மென்பொருள் நிறுவனங்கள் தயார் செய்யும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால், இஸ்ரோவிற்கு வரவேண்டிய மென்பொருள்கள் வருவதில் தடை ஏற்பட்டுள்ளது.

இதனால், திட்டங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ககன்யான் திட்டப்பணிகள் தற்போது தான் நடந்து வருகிறது. இந்த திட்டத்தில் தனியார்கள் தங்களுடைய பங்களிப்பை கொடுக்கும் போது அதை முறையாக ஆய்வு செய்து பின்னர் இந்த திட்டத்தில் அது அனுமதிக்கப்படும். ஆதித்யா திட்டத்தில் செயற்கைகோள் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டதால் இதில் தனியாரை அனுமதிக்க முடியாது. எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் திட்டம் இந்த வருடம் ஏவுவதாக இருந்தது. கொரோனாவினால் பணிபாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு முடிந்த பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். ஏராளமான செயற்கைகோள்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி மாநில அரசுகள் ஈடுபட முன்வந்தாலும் அதற்கு இஸ்ரோ அனுமதி அளிக்கும்.


Tags : ISRO ,Shiva ,interview , Interview with Shiva, Space, Private, ISRO Project
× RELATED முருகப் பெருமான் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் தலங்கள்