×

திருமணம் நடந்த 2வது நாளில் நடிகை வனிதாவின் 3வது கணவர் மீது மனைவி புகார்: வடபழனி காவல் நிலையத்தில் பரபரப்பு

சென்னை: திருமணம் நடந்த மூன்றாவது நாளில் நடிகை வனிதாவின் 3வது கணவர் பீட்டர்பால் மீது அவரது மனைவி வடபழனி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்துள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. நடிகர் விஜய் நடித்த சந்திரலேகா எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். வனிதா நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விவாகரத்து செய்து இரண்டாவதாக ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு அவரையும் விவாகரத்து செய்தார். வனிதாவின் மகன் ஆகாஷுடன் வளர்ந்து வருகிறார். மகள் வனிதாவுடன் இருக்கிறார்.

இந்நிலையில் இரண்டு கணவர்களையும் பிரிந்து தனியாக மகளுடன் வசித்து வந்த வனிதா தற்போது மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார். சிறிய அளவில் திருமணம் நடந்தாலும் ஆடம்பரமாக நடந்தது. மணப்பெண் வனிதாவுக்கு அவரது மகள்தான் மணப்பெண் தோழியாக இருந்தார். நடிகை வனிதாவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மூன்றாவது கணவர் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து எலிசபெத் ஹெலன் என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

கணவர் பீட்டர் பால் நடிகை வனிதாவை திருமணம் செய்து கொண்ட தகவல் அறிந்ததும் பீட்டர் மீது அவரது மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரில், ‘பீட்டருக்கு ஏற்கனவே என்னுடன் திருமணமாகி ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக 7 ஆண்டுகள் தனித்து வாழ்ந்து வருகிறோம். முறையாக விவாகரத்து அளிக்காமல் பீட்டர் பால் வேறொரு பெண்ணை(வனிதா) திருமணம் செய்துள்ளார். எனவே சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என எலிசபெத் ஹெலன் புகாரில் கூறியிருந்தார். அந்த புகாரின்படி போலீசார் வனிதாவின் மூன்றாவது கணவரான பீட்டர் பாலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடந்து இரண்டாவது நாளில் மூன்றாவது கணவர் மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Actress Vanitha , On the 2nd day of marriage, actress Vanitha, 3rd husband and wife complained
× RELATED தஞ்சாவூர் பற்றி அவதூறு பேச்சு!: நடிகை...