×

இந்தியா-சீனா மோதல் சினிமா படமாகிறது: இயக்குனர் மேஜர் ரவி தகவல்

இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர், மேஜர் ரவி. பிறகு திரைப்பட இயக்குனராகி, ராணுவம் தொடர்பான கதை கொண்ட படங்களை இயக்கினார். கீர்த்தி சக்ரா, மிஷன் 90 டேஸ், குருஷேத்ரா, காந்தஹார், கர்ம யோதா, பிக்கெட் 43, தமிழில் அரண் போன்ற படங்களை இயக்கிய அவர், லடாக் அருகிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்திய, சீன ராணுவ தாக்குதலை மையமாக வைத்து, பிரிட்ஜ் ஆன் கல்வான் என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:

இதற்கு முன்பு நான் இயக்கிய படங்கள் இந்திய ராணுவத்துக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையிலான மோதலை பற்றி இருந்தது. இந்த படம் இந்தியா, சீனா மோதலை அடிப்படையாக கொண்டது. இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே இதுவரை நடந்த மோதல் மற்றும் சீனாவின் அத்துமீறலை பேசும் படமாக, பிரிட்ஜ் ஆன் கல்வான் இருக்கும். எனது முந்தைய படங்களின் காட்சிகள், சம்பவம் நடந்த இடங்களிலேயே படமாக்கப்பட்டது. இப்படமும் கல்வான் பள்ளத்தாக்கிலேயே படமாக்கப்படும். லாக்டவுன் முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்துவிடுவேன் என்றார்.

Tags : Major Ravi ,conflict ,India ,China , Major Ravi, Director, India-China Conflict, Cinema, Info
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...