×

‘தன் வினை தன்னை சுடும்’ சீனாவின் கனவு திட்டம் அம்பேல்

பீஜிங்: ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகளை சாலை மற்றும் கடல் மார்க்கமாக இணைக்கும் வழித்தடங்களை உருவாக்குவதற்காக, சர்வதேச பொருளாதார பாதை எ்ன்ற கனவு திட்டத்தை (பிஆர்ஐ) சீன அரசு முன்னெடுத்தது. இத்திட்டத்தை சீன அதிபர் ஜின்பிங் கடந்த 2013ல் தொடங்கி வைத்தார். திட்டத்தின் ஒரு பகுதியாக, சீனா- பாகிஸ்தான் இடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக, ரூ.4.5 லட்சம் கோடி செலவில், பொருளாதார வழித்தடம் (சிபிஇசி) அமைக்கும் திட்டத்தை சீன அரசு தொடங்கியுள்ளது.

சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக, இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதற்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது. பிஆர்ஐ திட்டத்தை வெற்றிகரமாக முடித்து விட்டால், உலகளாவிய வர்த்தகத்தில் சீனாவின் பலம் மேலும் ஓங்கும். ஆனால், சீனாவின் இந்த எதிர்பார்ப்பை கொரோனா தவிடுபொடியாக்கி உள்ளது. கொரோனா பாதிப்பால், பிஆர்ஐ திட்டத்தின் 40 சதவீத பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சில இடங்களில் பாதித்து நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, ஆசிய நாடுகளில் இத்திட்டப் பணிகள் தொய்வடைந்துள்ள நிலையில், கொரோனாவும் தன் பங்குக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

Tags : China , He shot himself with his verb, China, Dream Plan, Ambel
× RELATED சொல்லிட்டாங்க…