×

வெளிநாடுகளில் தவித்த 487 இந்தியர்கள் மீட்பு

சென்னை: குவைத், பக்ரைன், செஷல்ஸ் நாடுகளில் சிக்கி தவித்த 487 இந்தியர்கள்  மீட்கப்பட்டு சிறப்பு மீட்பு விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். குவைத் மற்றும் பக்ரைனில் இருந்து வந்தவர்களுக்குசோதனை முடிந்ததும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். செஷல்சிலிருந்து நேற்று அதிகாலை வந்த 157 இந்தியர்களுக்கும் நடைமுறைகள் முடிந்து 14 நாட்கள் தனிமைப்படுத்த அனுப்பப்பட்டனர். அவர்களில் 143 பேர் இலவச தங்குமிடமான வேலப்பன்சாவடி சவீதா மருத்துவ கல்லூரி விடுதிக்கும், 14 பேர் கட்டணம் செலுத்தும் சென்னை நகர ஓட்டலுக்கும் அனுப்பப்பட்டனர்.

Tags : 487 Indians ,Indians , 487 Indians, rescued abroad
× RELATED சார்ஜா, ஓமன் நாடுகளில் தவித்த 317 இந்தியர்கள் மீட்பு