×

செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா

செஞ்சி: விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், செஞ்சி எம்எல்ஏவுமான மஸ்தான் கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் செஞ்சி ஒட்டம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பரிசோதனை மேற்கொண்டார். நேற்று காலை வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனை தொடர்ந்து செஞ்சியில் அவரது வீடு உள்ள தேசூர்பேட்டை பகுதியில் பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் கிருமி நாசினி தெளித்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Tags : Red MLA ,Corona ,Red , Ginger Block, DMK MLA, Corona
× RELATED வேகமாக பரவுகிறது பாக்டீரியா...