×

ஏற்கனவே தாய் உயிரிழந்த நிலையில் கொரோனாவுக்கு அரசு அதிகாரி பலி

அம்பத்தூர்: அம்பத்தூர், கள்ளிக்குப்பம், ஓம்சக்தி நகரை சேர்ந்த 58 வயது நபர், சென்னை வருவாய் நிர்வாக துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இவர் மற்றும் அவரது 78 வயது மதிக்கத்தக்க தாயார் ஆகியோருக்கு கடந்த 18ம் தேதி காய்ச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால், இவர்கள் சென்னை அரசு பன்நோக்கு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். அங்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதற்கிடையில், அவரது மனைவிக்கும் தொற்று ஏற்பட்டதால் அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், அதிகாரியின் தாயார் கடந்த 23ம் தேதி இறந்தார். நேற்று மதியம் வருவாய் நிர்வாக துறை அதிகாரியும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்திய குடியரசு கட்சி மூத்த நிர்வாகி பலி: வியாசர்பாடி முல்லை நகரை சேர்ந்தவர் ஆதிகேசவன் (64). அகில இந்திய டாக்டர் அம்பேத்கர் எஸ்சிஎஸ்டி கூட்டமைப்பின் தேசிய தலைவராக இருந்தார். இந்திய குடியரசு கட்சியின் மூத்த துணை தலைவராக இருந்தார். கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று இரவு உயிரிழந்தார்.


Tags : government official ,Corona , Death of Mother, Corona, Government Officer, Killed
× RELATED தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி