×

ராயபுரம் ரயில்வே அச்சகம் டிச.31 வரை மூடப்படாது: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னை ராயபுரத்தில் உள்ள ரயில்வே அச்சகத்தில் தினசரி 15 லட்சம் முன்பதில்லாத டிக்கெட்டுகள், 3 லட்சத்து 50 ஆயிரம் முன்பதிவு டிக்கெட்டுகள் அச்சிடப்படுகின்றன. இதுதவிர 5,000க்கும் மேற்பட்ட ரயில்வே அலுவலக ஆவணங்கள் அச்சடிக்கப்படுகின்றன. இந்தியாவில் அதிக டிக்கெட்டுகள் கையிருப்பு வைத்திருக்கும் அச்சுக்கூடம் இதுவாகும். இந்த அச்சகத்தை கடந்த மார்ச் 31ம் தேதிக்குள் மூடப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதற்கு பல்வேறு ரயில்வே சங்கங்களின் கோரிக்கையை தொடர்ந்து, மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அதாவது ஜூன் 30ம் தேதிக்குள் மூடப்படாது என்று நிர்வாகம் அறிவித்திருந்தது.

மேலும், பல்வேறு ரயில்வே தொழிற்சங்கங்கள் இந்த அச்சகத்தை மூடக்கூடாது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, அச்சகங்களை மூடி பயணச்சீட்டுகளை ரயில்வே கொள்முதல் செய்வது தனியார்மயமாக்கும் நடவடிக்கையாகும். அச்சகங்களை மூடும் முடிவை ரயில்வே வாரியம் கைவிட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், மேலும் 6 மாதங்கள் அதாவது டிசம்பர் 31ம் தேதி வரை சென்னை ராயபுரம், மும்பை பைகுலா, டெல்லி சகூர்பாஸ்டி, ஹவுரா மற்றும் செகந்திராபாத் போன்ற இடங்களில் உள்ள 5 ரயில்வே அச்சகங்கள் மூடப்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Raipur Railway Press ,Railway Administration , Raipur, Railway Press, will not be closed till Dec. 31, Railway Administration
× RELATED காத்திருப்போர் பட்டியலில் ரத்தான...