×

கடம்பத்தூர் ஒன்றிய குழு கூட்டம்

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் தலைவர் சுஜாதா சுதாகர் தலைமையில் நடைபெற்றது. இதில், துணைத்தலைவர் சரஸ்வதி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமு லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் திமுக ஒன்றிய கவுன்சிலர் கே.திராவிடபக்தன் வெங்கத்தூர் ஊராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும், பாமக ஒன்றிய கவுன்சிலர் நா.வெங்கடேசன் கூவம் ஆற்றின் குறுக்கே பட்டறை கிராமத்தில் தடுப்பணை கட்ட வேண்டும், வெங்கத்தூர் ஊராட்சியில் சுடுகாடு அமைக்க இடம் ஒதுக்கீடு செய்ய கோரியும், கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள தொழிற்சாலைகளில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 50 சதவிகிதம் வேலை வழங்கக் கோரியும், கோசாலை அமைக்க கோரியும் பேசினர்.

மேலும், தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கவுன்சிலர்கள் கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து குடிநீர் பிரச்சனையை தீர்க்க கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் ஏரி குளங்களில் குடிமராமத்து பணி மேற்கொள்ள வேண்டும், கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பா.யோகநாதன், கார்த்தி உள்பட கவுன்சிலர்கள் அரசு அலுவலர்கள் முககவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

Tags : Kadambattur Union Committee Meeting , Kadambattur, Union Committee, Meeting
× RELATED பொன்னேரியில் சாலையை சீரமைக்ககோரி மக்கள் நூதன போராட்டம்