×

செங்கல்பட்டில் வெறிச்சோடிய சாலைகள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் முழு ஊரடங்கால் நேற்று முக்கிய சாலைகள் சாலைகள் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி  வெறிச்சோடி காணப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், வண்டலூர்,  சிங்கப்பெருமாள் கோயில், ஊரப்பாக்கம், பரனூர் சுங்கச்சாவடி தேசிய நெடுஞ்சாலை முழுவதும் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது. இ-பாஸ் இன்றி வருவோரை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் கடந்த 19ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு துவங்கி, குறிப்பாக நேற்று 2வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு அறிவிப்பால் மருந்துகடைகள், காய்கறி மார்க்கெட் தவிர இறைச்சிகடை மீன்மார்க்கெட் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அத்தியாவசியப்  பொருட்கள் வாங்க கூட மக்கள் வெளியில் வரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சாலையில் ஒருசில வாகனங்களை தவிர முற்றிலும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் முற்றிலும் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. இதுபோன்று சென்னை புறநகர் பகுதிகள் ஒம்.ஆர். சாலை, கிழக்கு கடற்கரை சாலை, மதுராந்தகம், செய்யூர் ஆகிய பகுதிகளிலும் வாகனங்களின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

Tags : roads ,Chengalpattu ,Blasted Roads , brick, deserted, roads
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!