×

கைத்தறி நெசவாளர்கள் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்: நாளை கடைசி நாள்

காஞ்சிபுரம்: கைத்தறி நெசவாளர்களுக்கான ஊரடங்கு கால நிவாரணத் தொகை பெற, நாளைக்குள் ( 30ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டா் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கை.
காஞ்சிபுரம் சரகத்தில் கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெறாத, இலவச 200 யூனிட் மின்சாரம் பயன்பெறும் கைத்தறி நெசவாளர்களுக்கு ஊரடங்கு கால நிவாரணத்தொகை தலா ரூ.2,000 வீதம், மொத்தம் ரூ.1,34,74,000 விடுவிக்கப்பட்டு கடந்த 20ம் தேதி வரவு வைத்து சில வழிகாட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, உரிய விண்ணப்பங்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் கட்டணம் செலுத்தியதற்கான சமீபத்திய ரசீது நகல், மின் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகிய இணைப்புகளுடன் வரும் 30ம் தேதிக்குள் எண் 824, கே.எஸ்.பார்த்தசாரதி தெரு, காமாட்சியம்மன் காலனி, ஓரிக்கை, காஞ்சிபுரம் என்ற முகவரியில் செயல்படும், கைத்தறி மற்றும் துணிநூல் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது ddht_kpm@yahoo.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Linen weavers can apply for relief
× RELATED பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை