×

மாவட்டத்தில் 86 பேருக்கு கொரோனா தொற்று

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 1757 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதியில் 200 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 679 பேர் இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

குன்றத்தூரைச் சேர்ந்த வெல்டர் மற்றும் காஞ்சிபுரத்தை அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயி மற்றும் ஆதனூரைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 22 பேர், ஸ்ரீ பெரும்புதூரைச் சேர்ந்த 24 பேர், வாலாஜாபாத்தைச் சேர்ந்த 11 பேர், குன்றத்தூர், அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த தலா 4 பேர், மாங்காட்டைச் சேர்ந்த 6 பேர், உத்திரமேரூர், கோவூரைச் சேர்ந்த தலா 3 பேர், மலைப்பட்டைச் சேர்ந்த 2 பேர், படப்பை, மவுலிவாக்கம், கெருகம்பாக்கம், ஒரகடம், வடக்குப்பட்டு, பழந்தண்டலம், சிக்கராயபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 17 ஆகவும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1757 ஆகவும் உயர்ந்துள்ளது. இதில் 679 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலைல் 1061 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  

* ஒரு வாரத்தில் 1053 வழக்குகள் பதிவு
சீனாவின் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகின் பல நாடுகளிலும் கோரத்தாண்டவம் ஆடியது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாட்டில் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து பல்வேறு கட்டங்களாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஜூன் 30 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூன் 21ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதிவரை 1053 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக 709 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : district , Of the district, for 86, corona
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...