×

பெரும்பாக்கம் எழில் நகரில் அரிவாளால் கேக் வெட்டிய 4 இளம் ரவுடிகள் சிக்கினர்

வேளச்சேரி: பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம், எழில் நகரில் கடந்த 5ம் தேதி, 50க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் பிரியாணி மற்றும் மது விருந்துடன் ஒருவருடைய பிறந்தநாளை கொண்டாடினர். அப்போது, அரிவாளால் கேக் வெட்டிய  சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் நடத்திய விசாரணையில், பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்கள் கோட்டூர்புரம், அண்ணாசாலை, ஆயிரம்விளக்கு ஆகிய பகுதிகளை சேர்ந்த ரவுடிகள் என தெரியவந்தது. இவர்கள் மீது பள்ளிக்கரணை, சேலையூர், செம்மஞ்சேரி, நீலாங்கரை, ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த சிவானந்தம் (25), தினேஷ்குமார் (20), திவகர் (24), சல்மான் (23) ஆகிய 4 ரவுடிகளை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.

Tags : rowdies ,town , The majority, the town, the sickle cake, 4 juveniles
× RELATED அரசியலுக்குள் ரவுடிகள் வருவதை தடுக்க...