×

கடும் ஊரடங்கால் முடங்கியது திருவள்ளூர்: சாலைகள் வெறிச்சோடியது

திருவள்ளூர்: நேற்று கடும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், திருவள்ளூர் நகரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், நடந்து வந்தவர்களையும் போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அடுத்து திருவள்ளூர் மாவட்டம் கொரோனா பாதிப்பில் மாநில அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு 19ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, திருவள்ளூர் நகருக்குள் அத்துமீறி எந்த வாகனமும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக நகரில் சோதனை மற்றும் கண்காணிப்பு மிகக் கடுமையாகவே இருக்கிறது. கட்டுப்பாட்டை மீறி வெளியில் வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. குறிப்பாக இருசக்கர வாகனங்கள் முற்றிலும் திருவள்ளூர் நகரில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமையான நேற்று கடும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், திருவள்ளூர் நகரம் முழுமையாக முடங்கியுள்ளது. அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், சாலையில் நடந்து வந்தவர்களையும் போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். தடையையும் மீறி சாலைக்கு வந்த பைக்குகள் ஆங்காங்கே போலீசாரால் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்யப்பட்டன. 


Tags : roads ,Thiruvallur , Heavy curtains, paralyzed, Thiruvallur
× RELATED திருவள்ளூர் தொகுதிக்கான...